"ஊரடங்கால் 24 கோடி இந்திய பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு"-UNICEF
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் சுமார் 24 கோடி பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளதாக, ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மட்டுமின்றி, அங்கன்வாடி மையங்களை சேர்ந்த 2 கோடியே 80 லட்சம் சிறுவர்களும் பாதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், தெற்காசியாவை சேர்ந்த சுமார் 60 கோடி குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments